News Just In

1/11/2020 09:21:00 AM

அஸர்பைஜானில் இலங்கை மாணவிகள் தங்கியிருந்த வீடு தீக்கிரை-மூவர் பலி!

அஸர்பைஜான் நாட்டில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய ஆசிய நாடான அஸர்பைஜனானின் பாகு பிராந்தியத்தின் சபைல் மாவட்டத்திலுள்ள பாயில் நகரில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அஸர்பைஜனானின் ஏ.பி.ஏ ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, 21 முதல் 25 வயதான மூன்று மாணவிகளே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தாரக்கி அமாயா (21), தௌசி ஜயக்கொடி (25), மலாச்சி தாயுக் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஏ.பி.ஏ. தெரிவித்துள்ளது.

மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட தீயின் புகையினால் மூச்சுத் திணறி இம்மாணவிகள் உயிரிழந்துள்னர் என சபைல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பாகுவிலுள்ள வெஸ்டர்ன் கஸ்பியின் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் எனவும், மூவரும் மேற்படி வீட்டில் இரு மாதங்களாக வசித்து வந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்து

உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் தடயவியல் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. 

No comments: