News Just In

1/19/2020 06:30:00 PM

இராவணசேனை தைப்பொங்கல் விழா கோலாகலமாக இடம்பெற்றது


திருகோணமலை இராவணசேனை அமைப்பினால் வருடாந்தம் நடாத்திவரும் தைப்பொங்கல் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30மணியளவில் திருகோணமலை நகரசபை வளாகத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

இதன் போது கலைநிகழ்ச்சிகளும் நடனாலய மாணவிகளின் நிகழ்ச்சிகளும், சிலம்பாட்டம், விவாதங்கள் என்பன இடம்பெற்றன.
 
தமிழ் மக்களுக்கு சேவையாற்றுபவர்களும், ஊடகவியலாளர்ஙளும் இலஞ்சத்திற்கு எதிரான அரச அதிகாரிகளுக்கும் கௌரவம் வழங்கப்பட்டது.

அந்தவகையில் வெருகல் பிரதேச செயலாளர் குணநாதன் மற்றும் சமுகப்ணியாற்றியவர்களான BBc தமிழோசையில் ,திருகோணமலையில் முதல் ஒலித்துக்கொண்டிருக்கும் இரத்தினலிங்கம்,சமுகசேவையாளர் செல்வஜோதி,

ஆசிரியர் சண்முகநாதன் மட்டக்களப்பு திருகோணமலை முன்னால் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை போன்றவர்களின் சேவைகளை கௌரவிக்கும் முகமாக இலங்கேசன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.











No comments: