நெல்விலை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு அடுத்தவராம் தீர்வு என ச.அருண்தம்பிமுத்து தெரிவித்தார்
மட்டக்களப்பு – மட்டு ஊடக அமையத்தில் மக்கள் முன்னேற்றக்கட்சியின் செயலாளர் நாயகம் ச.அருண்தம்பிமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடக சந்திபொன்றை நடாத்தியிருந்தார் இதன்போது மேவும் தெரிவித்த அவர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் நெல்விலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லின்விலையானது 2000ரூபா -2500ரூபா வரையுள்ளன. அரசாங்;கமும் ஓரு கிலோ நெல்லினை 50 ரூபாவிற்கு கொள்வணவு செய்யப்படும் என்ற நிலையை எடுத்திருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அந் நிலை உருவாகவில்லை. நேற்றயமுன்தினம் வவுணதீவைச ;சோர்ந்த விவசாயிகள் எனது காரியாலயம் வருகைதந்திருந்து இந் நிலையை ஜனாதிபதிக்கு எடுத்துச்செல்லுமாறு கூறினர்.
நான் இது தொடர்பாக நோற்றுக்காலை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இந் நிலையை எடுத்துரைத்துள்ளேன்; அவர்களும் அதற்கு இணங்கி உடனடியாக நெல் சந்தப்படுத்தும் சபை அடுத்த வாரம் நெல்லினை கொள்வணவு செய்யும் என வாக்குறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து நெல்சந்தைப்படுத்தும் சபையின் தவிசாளர் மட்டக்களப்பில் நெல்லை கொள்வணவு செய்வது தொடர்பான வழியினை ஏற்படுத்தியுள்ளேன் என்று என்னைத் தொடர்புகொண்டு இன்று காலை கூட கூறியிருந்தார். திரைசேரியும் அதற்கான நிதியை வழங்கவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் இப்பிரச்சிணையை தொடர்ச்சியாக எதிர்நோக்கியுள்ளனர்.
பொலனறுவை மாவட்டத்தில் பெப்ரவரி மாதத்தில்தான் நெல் அறுவடை செய்வது வழக்கம் ஒவ்வொரு அரசும் பொலனறுவையை மையமாகத்தான் நெல் கொள்வனவு செய்வதை வழமையாக கொண்டுள்ளது.
இதற்கான ஒரு மாற்றுவழியை நாம் உடனடியாகத்தேட வேண்டும் என்ற விடயத்தை அரசுக்கு எடுத்துக்கூறியுள்ளேன்.
இதணையடுத்து ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு இந் நெற்கொள்வணவு தொடர்பாக விசேட குழுவை அனுப்பவுள்ளார்.
ஏனைய மாவட்டங்களைப் பார்க்க மட்டக்களப்பு மாவட்டம் நீர்ப்பாசணத்தில் எந்த முதலீடும் இல்லாமல் ஒரு அசமந்தப்போக்;கிலேயே நீர்ப்பாசனதிணைக்களம் இயங்குகிறது. நெல்சந்தைப்படுத்தும் சபையை பார்த்தோமாணால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு காரியாலயம் கூட இல்லை இவற்றையெல்லாம் அரசுக்கு மிகத் தெழிவாக கூறியுள்ளோம் இதிலிருந்து விவசாயிகள் மீழும் நிலை அடுத்தவாரம் உருவாகும்.

அடுத்தவாரம் தொடக்கம் நெல்சந்தப்படுத்தல் சபையால் நெல் கொள்வணவும் செய்யப்படும் விசவாயிகள் இது தொடர்பில் கவலை கொள்ளவேண்டாம் .எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments: