News Just In

1/10/2020 08:52:00 PM

மட்டக்களப்பு மாநகர சபையின் பௌர்ணமி கலை விழா


மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாநகர சபை உறுப்பினரும், கலை-கலாசார குழுவின் தலைவருமான வே.தவராஜா தலைமையில் இந்த வருடத்திற்கான முதலாவது பௌர்ணமிக் கலை விழாவானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை ஆணையாளர் கா.சித்திரவேல் அவர்களும், கௌரவ அதிதிகளாக மாநகர சபையின் பிரதி முதலவர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்த பௌர்ணமி கலை விழாவில் நாடகம், நடனம், விவாதம்  என்பன இடம்பெற்று நிகழ்வினை அலங்கரித்தன.

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த பௌர்னமி கலைவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




































No comments: