திருமணமான பெண்களுக்கான MRS WORLD 2020 அழகுராணி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. 51 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் இப்போட்டியில் பங்குபற்றினர்.
நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கையின் கெரோலின் ஜூரி முதலிடம் பெற்றார். அழகுராணி பட்டத்தை வென்ற கெரோலின் ஜூரிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
"MRS WORLD 2020" என முடிசூட்டப்பட்ட திருமதி. கரோலின் ஜூரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 35 வருடங்களின் பின் நமது நாட்டிற்கு சர்வதேச பட்டத்தை மீண்டும் கொண்டுவந்து இலங்கையர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்த உங்களுக்கு எனது நன்றிகள் என அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.





No comments: