கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஒரு வருட பயிற்சி நெறியினை நிறைவு செய்த பெண்களின் கைவினைப் பொருள்களின் கண்காட்சி அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கண்காட்சியினை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க முன்னாள் பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மாவட்ட அனர்த்து முகாமைத்துவப்பிரிவின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.ஏ.நகீப், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர், மற்றும் உத்தியொகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஒருவருட டிப்ளோமாவை நிறைவு செய்தவர்களின் தையல் கைப்பணிகள், உணவு வடிவமைப்புக்கள், கேக் மேக்கிங், அழகுக்கலை பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
12/28/2019 10:11:00 AM
நிந்தவூரில் இடம்பெற்ற கைவினைப் பொருள்களின் கண்காட்சி
Subscribe to:
Post Comments (Atom)








No comments: