சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அரச அரசசார்பற்ற நிறுவனங்களால் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கமைவாக ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணத்தின் தெரிவுக்கமைவாக வெள்ள நிவாரணம் வளங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையிலே மயிலவெட்டுவான், வேப்பவெட்டுவான், பாலமின்மடு, கரடியன்குளம், சித்தாண்டி ஆகிய கிராமங்களில் கடுமையாக வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முனைப்பு நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைவர் எம்.சசிகரன், பொருளாளர் தயாபரன் மற்றும் முனைப்பு நிறுவனத்தின் உறுப்பினர்கள்,பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம் ஆகியோருடன் இணைந்து அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
அரசாங்க நிதிக்கு அப்பால் இவ்வாறான பொது நிறுவனங்கள் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வருகின்ற தமிழ் பேசும் மக்களினால் இவ்வாறான அனர்த்தங்களின் போது பல வகையான உதவிகளை செய்து வருவதையிட்டு இவ்வாறான நிறுவனத்திற்கு பாராட்டும் நன்றிகளையும் தெரிவித்தார்.
12/28/2019 09:55:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
வெள்ளப் பாதிப்பு
/
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஏறாவூர்பற்று பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஏறாவூர்பற்று பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)















No comments: