News Just In

12/29/2019 12:39:00 PM

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச கலாசார இலக்கிய விழாவும் நூல் வெளியீடும்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச கலாசார இலக்கிய விழா ஏறாவூர் நான்காம் குறிச்சி மாஞ்சோலை மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ந.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதேசத்தின் பாராம்பரிய காலை நிழ்கவுகள் அரங்கேற்றப்பட்டதுடன் கலைத்துறையில் சேவையாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

பிரதேசத்தின் எழுத்தாளர்களின் உருவாக்கத்தில் நானிலம் மற்றும் புதிய மழை என இரு நூல்களும் வெளியீட்டுவைக்கப்பட்டன.
 

No comments: