News Just In

12/29/2019 02:37:00 PM

செங்கலடி விபத்து-கால் உடைந்து பலத்த காயம்!


(கஜேந்திரன்)
மட்டக்களப்பு, செங்கலடி-பதுளை பிரதான வீதியில் கொடுவாமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் இன்று(29) மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்தவர்களில் ஒருவருக்கு கால் உடைந்துள்ளதாக தெரியவருகிறது. மற்றயவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமுற்றவர்களை செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கரடியனாறு பகுதியில் இருந்து செங்கலடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், செங்கலடியில் இருந்து எதிர் திசையில் பயணித்த முச்சக்கர வண்டியும் நேர் எதிர் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் இரு வாகனங்களும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த நபருக்கே கால் உடைந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரியவருகிறது.

இது தொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: