
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சமீபத்திய வானிலை சீரற்ற தன்மையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்குள்ளான இல்லாத இயலாத மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அத்தியாவசிய இடருதவிகளை வழங்கி வருவதாக அதன் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் ரீ. வசந்தராசா தெரிவித்தார்.
இது தொடர்பாக திங்கட்கிழமை 09.12.2019 தற்போதைய நிவாரண முன்னெடுப்புக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக மோசமான பாதிப்பிற்குள்ளான மக்களைத் தெரிவு கண்டு அவர்களுக்கான உலர் உணவு, குடி நீர், ஆடைகள், உட்பட அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகின்றோம்.
இவ்விதம் இதுவரை 210 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பெறுமதியான உதவிப் பொருட்கள் அவசர இடருதவியாக வழங்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தினால் பாதிப்புற்று அவதியுறும் பறங்கியமடு, தேவபுரம், சித்தாண்டி, முள்ளிவெட்டுவான், ஆஞ்சநேயர், ஆகிய பகுதிகளில் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் சகிதம் சேரில் சென்று பார்வையிட்டதன் அடிப்படையில் நிலமையினைக் கவனத்திலெடுத்து உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நிலைமை சீரடைந்து மக்கள் தமது இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் முற்றாக நீரினால் சூழப்பட்ட கிரமங்களிலுள்ள கிணறுகளை இறைத்து துப்புரவு செய்து கொடுக்கும் பணியிலும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபடவுள்ளதாகவும் வசந்தராசா மேலும் தெரிவித்தார்.





No comments: