அரச மற்றும் தனியார் பஸ்களில் முற்கொடுப்பனவு அட்டையினை பயன்படுத்திப் பயணிப்பதற்கான புதிய திட்டமொன்றினை நடைமுறைக்குக் கொண்டுவரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தென் மாகாண தனியார் பஸ் நிறுவன பணிப்பாளர் சபையுடன் தங்காலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அவர் பயணிகளைப் போன்று பஸ் உரிமையாளர்களின் வசதிக்காக குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது அனுமதி சீட்டுக்கு பதிலாக முன்கூட்டியே பணம் செலுத்தக்கூடிய அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்றும் இது தொடர்பில் தற்போழுது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
12/28/2019 06:45:00 PM
பஸ்களில் அனுமதிச் சீட்டுக்கு பதிலாக முன்கூட்டியே பணம் செலுத்தும் அட்டை அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: