மட்டக்களப்பில் தற்போது பெய்து வரும் கனமழையினால் மக்கள் இடம்பெயர்ந்து, விவசாய நிலங்கள் அழிவடைந்து காணப்படுகின்றது. மண்முனை மேற்கு ஆயத்தியமலை பிரதேசத்தில் காணப்படும் வேளாண்மை செய்கை உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால் நீரில் மூழ்கியுள்ளது.
ஆயத்தியமலை பிரதேசத்தில் பொன்னாங்கண்ணி சேனை கண்டம், வாழைச்சேனைக் கண்டம் என்று சொல்லப்படுகின்ற பாரியளவான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் தாண்டுள்ளன
உன்னிச்சை குளத்தினை நம்பி விவசாயம் செய்யும் இப் பிரதேச விவசாயிகளுக்கு முன்னர் செய்த சிறுபோகத்தில் குளத்தில் நீர் இல்லாமல் வரட்சியால் பாதிக்கப்பட்டனர், தற்போது குளத்தில் நீர் அதிகரித்ததால் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலை ஒவ்வொரு வருடமும் இவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை செலுத்துகின்றது.
தொடர்சிச்சியாக பாதிக்கப்படும் இப் பிரதேச விவசாயிகளுக்கு ஒழுங்கான தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்படவில்லை, தை பிறந்தால் வழி பிறக்கும் என காத்திருக்கும் இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
எனவே தங்களுக்கான நிவாரணத்தினை அரசாங்கம் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வைக்க வேண்டும் என்றும் அதற்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்றும் கேட்கின்றனர்.
















No comments: