News Just In

12/27/2019 11:15:00 AM

விருட்சம் உதவும் உள்ளங்கள் அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

விருட்சம் உதவும் உள்ளங்கள் அமைப்பின் வருடாந்தோறும் "கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டம்" ஊடாக நேற்று (26) மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் மட்/ விபுலானந்த வித்தியாலயம் பாடசாலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மண்முனை பற்று பிரதேச செயலகம் பிரிவின் 105 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வவர் திரு.சரவணபவன் , பிரதி முதல்வர் திரு.சத்தியசீலன் அவர்களும் கலந்து கொண்டனர் அத்தோடு மாநகர சபை உறுப்பினர் திரு.ஜெயா மற்றும் கல்லடி முகத்துவாரம், திருச்செந்தூர் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள்,ஆலயடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகிகள், 

கடல்மீன் கழக நிர்வாகிகள் , இந்து மன்ற விபுலானந்த வித்தியாலய அறநெறி பாடசாலையின் நிர்வாகிகள், விபுலானந்த வித்தியாலயம் பாடசாலையின் உப அதிபரும் ஆசிரியர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

விருட்சம் உதவும் உள்ளங்கள் அமைப்பானது வறுமை கோட்டின் கீழ் காணப்படும் திறமை உள்ள மாணவர்களுக்கு பலதரப்பட்ட உதவிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




















No comments: