News Just In

12/28/2019 12:28:00 PM

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவி மருத்துவ துறைக்கு தெரிவாகி வரலாற்றுச் சாதனை


மட்/ க கு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவி கிருபைரெட்ணம் ஜெயந்தினி உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் மாவட்ட மட்டத்தில் 24 ஆவது இடத்தினைப் பெற்று(Z.Score-1.6444)  வைத்திய துறையில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகி தனது குடும்பத்திற்கும், பாடசாலை சமூகத்திற்கும் பெருமை  சேர்த்துள்ளார்.

மாவடிவேம்பு கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் உள்ள சாதாரண குடும்பத்தை சேர்ந்த  ஜெயந்தினி பல பொருளாதார தடைகளைத் தாண்டி சிறந்த பெறுபேறை பெற்றுக்கொண்டுள்ளமை பாராட்டப் பட வேண்டிய ஒன்றாகும்.

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் வந்தாறுமூலை கிராமத்தில் இருந்து சித்தாண்டி பிரதேசத்திற்கு 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்மாற்றப்பட்டது. இடமாற்றப்பட்டு கிட்டத்தட்ட 40 வருடங்களை தொட்ட போதிலும் குறித்த காலப்பகுதியில் மருத்துவ துறைக்கு ஒருவரும் தெரிவாகவில்லை.

இக் காலப்பகுதியில் முதலாவது முறையாக மருத்துவ துறைக்கு தெரிவாகி கிருபைரெட்ணம் ஜெயந்தினி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலை அதிபர் க.பகிரதன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தியுள்ளனர்.

No comments: