கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன.
அதற்கமைய குறித்த பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி, தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்தும் பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒகஸ்ட் மாதம் ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் இம்முறை 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் தோற்றியிருந்தனர்.
புதிய பாடத்திட்டத்திற்கு ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 229 பேர், பழைய பாடத்திட்டங்களுக்கு ஒரு இலட்சத்து 39ஆயிரத்து 475 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: