News Just In

12/26/2019 08:49:00 AM

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் இரத்து!?-ரத்ன தேரர் தனிநபர் சட்டமூல பிரேரணை

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை இரத்துச் செய்­வ­தற்­கான தனியார் சட்­ட­மூலப் பிரே­ரணை ஒன்றை தேசிய பட்­டியல் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அத்­து­ர­லியே ரத்ன தேரரால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது . இது தொடர்பில் அர­ச வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

விவாக (பொது திருத்­தச்­சட்­டத்தில்) திருத்­தங்­களைக் கொண்­டு­வ­ர ஒரு சட்­ட­மூ­லத்தை அவர் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

குறித்த பொது­வான சட்­டத்தை சகல பிர­ஜை­க­ளுக்கும் பிர­யோ­கிக்கக் கூடிய ஒன்­றாக மாற்­று­வதே இந்தச் சட்­ட­மூ­லத்தின் நோக்­க­ம் என அவர் தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் உட்­பட ஏனைய சகல விவாக சட்­டங்­க­ளையும் மேலோங்­கி­ய­தாக விவாக (பொது) ஒழுங்கு விதிகளை மாற்றியமைப்பதே சட்ட மூலத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: