கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவானது தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவானது எதிர்வரும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி பதிவாளர் அறிவித்துள்ளார்.
பட்டமளிப்பு விழா தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி பதிவாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11/09/2019 08:33:00 AM
கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)

No comments: