News Just In

11/04/2019 02:38:00 PM

மத்திய மாகாண சமாதான நீதிவான்கள் மாநாட்டில் விருது பெற்ற லோகிதராஜா தீபாகரன்


இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையால் மத்திய மாகாணம் சார்பாக  ஹற்றனில்  02.11.2019 மாலை நடை பெற்ற இலங்கை சமாதான நீதிவான்கள் மாநாட்டில் சமூகத்திற்காக கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சிறந்த சேவையாற்றிய சமாதான நீதிவான்களுக்கு அவர்களின் சமூக சேவையை பாராட்டி  தேச சக்தி  விருது வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு வாலிபர் முன்னனி தலைவர் லோகிதராஜா தீபாகரன் அவர்களுக்கு விருது வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவை தேசிய பணிபாளர் கலாநிதி பஹாத் மஜீட் , வடமாகாண பணிப்பாளர், கிழக்குமாகாண பணிப்பாளர், மத்திய மாகாண பணிப்பாளர்,
மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்ட பணிப்பாளர்கள்  எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரான லோகிதராஜா தீபாகரன்  பேராதனை பல்கழைகழகத்தில் கலைமானி முதுமானி  பட்டங்களை முடித்தவர்,ஏறாவூர் நகர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், இந்து கலாச்சார அமைச்சின் யோகா பயிற்றுவிப்பாளர்,
இலங்கை தமிழரசுகட்சியின் இளைஞர் அணி தலைவர்,
எமக்காக நாம் உதவிடுவோம் வாரீர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்,
யோகாசன போதனாசிரியர், கோல்டன் ஈகிள் விளையாட்டு கழக செயலாளர்,

இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க செயலாளர்,யோகா ஆரோக்கிய இளைஞர் கழக் செயலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க செயலாளர், குமாரத்தன் ஆலய நிருவாக உறுப்பினரும் வட்டார தலைவரும், உதவும் கரங்கள் அமைப்பின் நிருவாக உறுப்பினர்
மட்டக்களப்பு மாவட்ட வளவாளர் குழாம் நிருவாக உறுப்பினர், புனித மிக்கேல் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர் என பல அமைப்புக்களில் அங்கம் வகித்து சேவையாற்றும் ஒருவராக திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments: