News Just In

11/04/2019 03:07:00 PM

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான தேர்தல் அறிவுறுத்தல் கருத்தரங்கு

(ஏ.எச்.ஏ ஹுஸைன்)
சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் பயிற்சிக் கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை (04) தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 428 சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு தங்களுடைய கடமைகளை மிகவும் அவதானமாகவும் கவனத்துடனும் செயற்படவேண்டும் என்றும், ஜனாதிபதி தேர்தல் சட்டம் 1981ம் ஆண்டு 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் சகல தேர்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என உதவி தெரிவத்தாட்சி அலுவலர் ஆர்.சசிலன் தெரிவித்தார்.

மேலும் தெரிவத்தாட்சி அலுவலர் குறிப்பிடுகையில் 428 சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு மிகவும் பொறுப்பு வாய்ந்த கடமையினை அரசாங்கம் கையளிக்கவுள்ளது. ஆகையினாலே வாக்கெடுப்பு நிலையங்களில் சுமுகமான முறையில் வாக்களிப்பிற்கு பங்களிப்பு செய்வதுடன் வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500அடி வரையுள்ள சுற்றுவட்டத்திற்குள் ஏற்படுகின்ற பிரச்சனைகளை கூட சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வாக்காளருக்கு இடையூறு ஏற்படாமல் வாக்களிப்பினை உரிய நேர காலத்திற்கு நடாத்துவது மிக மிக அவசியம் என்பதனை வலியுறுத்தினார்.

No comments: