News Just In

11/04/2019 03:22:00 PM

மட்டு மாநகர பாடசாலைகளுக்கிடையிலான வினாவிடைப் போட்டியில் மகாஜனக் கல்லூரி முதலிடம்


தேசிய வாசிப்பு மாதமாகிய ஒக்டோபர் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு பொது நூலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வினாடி வினாப் போட்டிகள் இன்று (04.11.2019) நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தில் தேசிய வாசிப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு தொனிப் பொருளுடன் வாசிப்பு மாதமானது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2019ம் வருடத்திற்கான தொனிப்பொருள் 'வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்” என்பதாகும்.

இதன்படி மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மெதடிஸ்த மத்திய கல்லூரி, மகாஜனக் கல்லூரி, வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை, புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம்,கருவப்பங்கேணி விபுலானந்தா, பூநொச்சிமுனை இகிறாப் வித்தியாலயம், கல்லடி-உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரி ஆகிய 7 பாடசாலைகளின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்ற வினாடி வினாப் போட்டியின் நடுவர்களாக கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் க.சத்தியசேகர், மாவட்ட சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் குகதாசன் மற்றும் திருமதி சுந்தரமதி வேதநாயம் ஆகியோர் கலந்து கொண்டதுடன். சன சமுக உத்தியோகத்தர் அன்பழகன் குருஸ் போட்டிகளை நெறிப்படுத்தி நடாத்தியிருந்தார்.

விறுவிறுப்பாக இடம்பெற்ற மேற்படி வினாடி வினாப் போடடியில் முதலாம் இடத்தினை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியும், இரண்டாம் இடத்தினை மெதடிஸ்த மத்திய கல்லூரியும், மூன்றாம் இடத்தினை வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையும் பெற்றுக்கொண்டன.


















No comments: