News Just In

11/04/2019 02:02:00 PM

பொலிஸ் நிலையம், மாவட்ட செயலகங்களை உள்ளடக்கிய ஊழியர்களுக்கான வாக்களிப்பு இன்று ஆரம்பம்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களை உள்ளடக்கிய ஊழியர்களுக்கான வாக்களிப்பு இன்று (4) ஆரம்பமாகின்றது. இந்த வாக்களிப்பு நாளையும் இடம்பெறும்.

தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் இன்றைய தினம் தமது தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்வர் என்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு முதல் கட்டம் கடந்த 31 ஆம் திகதியும் இம்மாதம் 1 ஆம் திகதியும் இடம்பெற்றது.

இத் தினங்களில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்களில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள சந்தர்ப்பம் உண்டு.

No comments: