News Just In

11/23/2019 07:50:00 PM

மட்டக்களப்பு ஸ்ரீலங்கன் லேர்ன் பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழா


மட்டக்களப்பு ஸ்ரீ லங்கன் லேர்ன் பாலர் பாடசாலையின் (Sri Lankan Learn Kindergarden) பரிசளிப்பு நிகழ்வு இன்று சனிக்கிழமை (23.11.2019) மட்டக்களப்பு அல்மைடா மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி.ஜனார்த்தனி மகிழ்நம்பி தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக ஸ்ரீ லங்கன் லேர்ன் பாலர் பாடசாலை நிறுவகத்தின் பணிப்பாளர் V. மகிழ்நம்பி,  மட்டக்களப்பு முன்பள்ளி ஆரம்பப் பிரிவு உதவிக் கல்வி பணிப்பாளர் M.புவிராஜ், திருமதி.இந்திராணி புஸ்பராஜா, அருட் சகோதரி அனுசியா,
திருமதி யோகேந்திரன், திருமதி சிவலோஜினி குகதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பரிசளிப்பு வைபவத்தில் மாணவர்களின் அரங்க நிகழ்வுகள், அதிகளின் உரைகள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.






























No comments: