News Just In

11/03/2019 12:43:00 PM

மட்டக்களப்பில் மட்டு ஊடக அமையம் திறப்பு

மட்டக்களப்பில் ஊடகவியலாளருக்கான "மட்டு ஊடக அமையம்" இன்று ஞாயிற்றுக்கிழமை (03) மட்டக்களப்பு அரச பேருந்து நிலையத்தின் மேல் மாடி கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் V.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் அவர்கள் கலந்து கொண்டு ஊடக அமையத்தினை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் மதத் தலைவர்கள் சிவபாதம் குருக்கள், அருட்தந்தை ராஜன் ரொகான்,மௌலவி எச்.எம்.ஷாஜகான்,  மட்டக்களப்பு சமூக சிவில் ஒன்றியத்தின் தலைவர் சிவயோகநாதான் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


.

No comments: