நேபாளத்தில் இம்முறை நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை பாரம் தூக்கும் (Weight Lifting) குழுவினரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டியில் ஆண், பெண் அடங்கலாக 14 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 7 பேரைக் கொண்ட இலங்கை பாரம் தூக்கும் மகளிர் அணிக்கு தலைவியாக சமரி வர்ணகுலசூரிய செயற்படுகின்றார்.
ஆண்கள் பிரிவிற்கு பொதுநலவாய ஒன்றிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்ற எல்.இந்திக்க தலைமை தாங்குகின்றார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு நகரில் ஆரம்பமாகவுள்ளது.
11/03/2019 02:48:00 PM
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பாரம் தூக்கும் இலங்கை அணியினர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: