வலுவான முறையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைத்ததைத் தொடர்ந்து மேலும் கடனுதவி வழங்க முடியும் என்று பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் சுஜித் பிரசன்ன காரியவசம் தெரிவித்துள்ளார்.
பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு தனது சொத்துக்களை அதிகரிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் கிடைக்கப் பெற்ற 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி பெரும் பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடன் வழங்கும் போது 'என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் வங்கியின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
11/03/2019 09:40:00 AM
சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை முன்னெடுக்க கடனுதவி
Subscribe to:
Post Comments (Atom)

No comments: