சர்வதேச நாணய நிதியத்தின் விரிவுபடுத்தல் கடன் வசதிகளின் கீழ் இலங்கை தொடர்பிலான 6வது மதிப்பீடு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 164 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை 6வது கட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த 6வது கட்ட நிதி வழங்கப்படுவதையடுத்து விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மொத்த நிதியின் அளவு 1.31 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதேவேளை இந்த கடன்வசதி வேலைத்திட்டம், அடுத்த வருடம் ஜுலை மாதம் 2ம் திகதி வரை நீடிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.
இந்தக் கடன் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள மொத்த கடன் தொகை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11/03/2019 09:34:00 AM
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதியுதவி
Subscribe to:
Post Comments (Atom)

No comments: