News Just In

11/03/2019 06:22:00 AM

தாய்லாந்து மொழியில் திருக்குறள் வெளியீடு

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில், தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (02) காலை தில்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பெங்கொக்கிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோதி ஆசியான் மாநாடு கிழக்காசிய மாநாடு மற்றும் கூட்டுப் பொருளாதார மாநாடு ஆகியவற்றில் பங்கேற்றார். இந் நிகழ்வில் திருக்குறள் வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோதி வணக்கம் என்று தமிழில் கூறியதுடன் எங்கிருந்தாலும் நீங்கள் இந்தியர்களே. தாய்லாந்து எனக்கு வெளிநாடு போன்று தோன்றவில்லை என்று கூறினார்.

உலக முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறளை ‘தாய்’ மொழியில் டாக்டர் சுவிட் மொழிபெயர்த்துள்ளார். இவர் அப்துல் கலாமின் பல்வேறு நூல்களையும் மொழிபெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments: