News Just In

11/03/2019 07:24:00 AM

றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது தென்னாபிரிக்கா

2019ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத்தை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.

உலகக் கிண்ண றக்பி போட்டியின் இறுதிப் போட்டி ஜப்பானில் சனிக்கிழமை (02)  இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின.

ஆரம்பித்தில் இருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தென்னாபிரிக்க அணி இறுதியில் 32க்கு 12 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.

இதன்படி தென்னாபிரிக்க அணி மூன்றாவது முறையாக றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

No comments: