News Just In

11/03/2019 08:23:00 AM

அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து விபத்துக்குள்ளானது!

முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து வண்டி மீன் ஏற்றிச் சென்ற வண்டியொன்றுடன் மோதி சனிக்கிழமை (02) அதிகாலை விபத்துக்குள்ளாகியது.

முல்லைத்தீவில் இருந்து பிற்பகல் 04.00 மணியளவில் புறப்பட்ட குறித்த பேருந்து ரிதிதென்ன பகுதியில் வைத்தே விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: