News Just In

11/02/2019 08:07:00 PM

மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாய் வெட்டப்பட்டது

மட்டக்களப்பில் கடந்தவாரம் ஏற்பட்டுள்ள கனமழைகாரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு அழிவடையும் அபாயத்தினை குறைக்கும் நடவடிக்கையாக இன்று மாவட்ட அரசாங்க  அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் அனுமதியுடன் பிரதேச செயலாளர் வீ.வாசுதேவனின் நேரடி கண்காணிப்பில் அனர்த்த முகாமைத்துவ நிலைய  உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் எஸ்.சசிநந்தன் மற்றும் மீன் பிடித்திணைக்கள பிரதிநிகள் மீனவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு வெள்ள நீரை வெட்டி கடலுக்குள் அனுப்பப்பட்டது.

மீனவர்கள் முகத்துவாரம் ஆற்றுவாயிணை வெட்டுவதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தவண்னம் இருந்தனர் அதிகாரிகளினால் மக்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவருவதாகவும் தங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கு எந்தவொருநிவாரண உதவிகளும் செய்யப்படுவதில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

அதுபோன்று விவசாயி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கு எவராலும் நட்டஈடுகள் வழங்கப்படுவதில்லை என்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட அழிவுகளுக்கு இதுவரை எவ்வாறான நிவாரணமும் கிடைக்காத நிலையில் கடன்பட்டு இத்தொழிலை செய்துள்ளோம் இயற்கையும் இவ்வாறு பாதிப்பினை ஏற்படுத்தினால் நாம் என்ன செய்வது என தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்த நிலையில் சமாதானமான முறையில் முகத்துவார ஆற்றுவாய் வெட்டப்பட்டு கடலுக்குள் வெள்ள நீர் அனுப்பப்பட்டது.
 

No comments: