News Just In

11/04/2019 06:03:00 PM

தரம் 01இல் மாணவர்களை இணைத்துக்கொள்ளல் - மேன்முறையீட்டு எதிர்ப்பு குறித்து விசாரணை

தரம் 1 இல் மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் மேன் முறையீடு மற்றும் எதிர்ப்புக்களை கவனத்தில் கொள்ளும் நடவடிக்கை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக தேசிய பாடசாலைகளுக்கு தேவையான சபை கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாடசாலைப் பணிப்பாளர் எச்.டி.புண்ணியதாச தெரிவித்துள்ளார். சில தேசிய பாடசாலைகளில் தற்காலிக பெயர்ப் பட்டியல் இதுவரையில் காட்சிப்படுத்தப்படவில்லை. இந்த தற்காலிக பட்டியல் காட்சி படுத்தப்பட்ட பின்னர் எதிர்ப்பு மற்றும் மேன்முறையீட்டிற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேன் முறையீடு மற்றும் எதிர்ப்பை கவனத்தில் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட சபைகளுக்கு சில சந்தர்ப்பங்களில் வேறொரு பாடசாலை அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவார். அத்தோடு சில தேசிய பாடசாலைகளில் இந்த சபைக்கு அமைச்சின் அதிகாரி ஒருவரின் ஒத்துளைப்பு வழங்கப்படும் என்று தேசிய பாடசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

No comments: