
அமிர்தகழி, மாமாங்கம், கருவேப்பங்கேணி, புன்னைச்சோலை ஆகிய கிராமங்களில் வாழுகின்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு PALM - LICC ஆகிய நிறுவனங்கள் இணைந்து "ஜீவனாளி" சிறிய ஆடைத் தொழிற்சாலையை செவ்வாய்க்கிழமை (22) அமிர்தகழி - பாடசாலை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
LICC நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பி.யசோதரன் மற்றும் பாம் நிறுவன பணிப்பாளர் சுனில் தொம்பேபொல ஆகியோரின் தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார்
மேலும் இந் நிகழ்வில் LICC நிறுவன ஆலோசகர் பரீடா, மண்முனை வடக்கு, களுவாஞ்சிக்குடி உதவி பிரதேச செயலாளர்கள், LICC நிறுவனத்தின் வர்த்தக முகாமையாளர் விமல் செல்வதுரை, அபிவிருத்தி முகாமையாளர் சாரித் ரூபசிங்க, மண்முனை வடக்கு திட்டமிடல் பணிப்பாளர், அமிர்தகழி பாடசாலை அதிபர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழிலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
No comments: