உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் அதில் உள்ளடங்கியுள்ளன. 200 பக்கங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்து வருவதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.
இந்த அறிக்கை தொடர்பில் வெளியாகும் சில தகவல்கள் தவறானது என குறிப்பிட்டுள்ள அவர், எவரையும் குற்றவாளியாக்குவதற்காக இந்தக் குழு அமைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
No comments: