News Just In

10/22/2019 05:47:00 PM

சிவாநந்தா தேசிய பாடசாலையின் சாதனையாளர்களை வரவேற்கும் நிகழ்வு



தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய சாதனையாளர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (22) மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய பாடசாலையின் அதிபர் T.யசோதரன் தலைமையில் நடைபெற்றது.

தேசிய மட்ட விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் முகமாக ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் முன்பாக ஒன்றுகூடிய பாடசாலை அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சாதனையாளர்களை வரவேற்று பாடசாலைக்கு அழைத்து வந்தனர்.

20 வயதிற்கு உட்பட்ட  தேசியமட்டக் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற செல்வன் S.வசந்தன் , 20 வயதிற்கு உட்பட்ட தேசிய மட்ட 57 – 61KG மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற செல்வன் C.பவித்திரன் , 17 வயதிற்கு உட்பட்ட தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்ற S.தனுஜன் ஆகிய மாணவர்களே வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் ஏனைய பிரிவு விளையாட்டுக்களில் திறமையினை காட்டிய மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சாதனை புரிந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் V.லவக்குமார், மட்டக்களப்பு சமூக அபிவிருத்தி ஒன்றிய தலைவர் S.தேவசிங்கன், கராத்தே பயிற்றுவிப்பாளர்கள் K.குகதாசன், K.J பிரகாஷ், மல்யுத்தப் பயிற்றுவிப்பாளர் திருச்செல்வம், கல்லடி பிரதேச அமைப்புக்களின் அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments: