News Just In

10/23/2019 08:15:00 AM

ஆரையம்பதியில் இடம்பெற்ற நல்லிணக்கம் தொடர்பான செயலமர்வு

"கடந்த கால துன்பங்களிலிருந்து மீண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பல்" எனும் தொனிப்பொருளில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் அனுசரணையுடன் இளைஞர் யுவதிகளுக்கான நல்லிணக்கம் தொடர்பான கருத்தாடல் செயலமர்வொன்று மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி அவர்கள் கலந்து கொண்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

பட்டிப்பளை, களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள் இணைந்து இந் நிகழ்வினை நடாத்தியிருந்தனர். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை நிலைநாட்டும் முகமாக கிராம மட்ட குழுக்களின் பிரதிநிதிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சியினை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: