மாவட்ட சிறுவர் சபையின் ஏற்பாட்டில் "பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு" எனும் தொனிப்பொருளில் 2019ஆம் ஆண்டிற்கான சிறுவர் பங்கேற்பு சிம்போசியம் மற்றும் உலக சிறுவர் தின நிகழ்வானது மாவட்ட சிறுவர் சம்மேளனத்தின் தலைவர் P.கமல்ராஜ் தலைமையில் தன்னாமுனை மியானி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிப்பாளர், பொலிஸ் அதிகாரிகள், மனநல மருத்துவ ஆலோசகர் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறுவர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பிரதேச மட்டத்தில் சிறுவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வு நடைபெற்றது. மேலும் சிறுவர்களுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டல் வழங்கப்பட்டு "சிற்பமாகும் சிறுவர்கள்" எனும் சிறுவர்களின் ஆக்கங்களைக் கொண்ட சிறுவர் சஞ்சிகை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுவர் உரிமைகள் தொடர்பில் நடாத்தப்பட்ட மாவட்ட மட்டத்திலான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் சிறப்பாக செயற்பட்ட சிறுவர் உரிமை பாதுகாப்பு தொடர்பான உத்தியோகத்தர்களுக்கும் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டது.
No comments: