News Just In

10/22/2019 07:19:00 PM

மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு கூட்டம்


மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு தொடர்பான தெளிவூட்டல்  கூட்டம் இன்று (22) மாநகர மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிரதம கணக்காளர் திருமதி ஜி.எச்.சிவராஜா மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள், மாதர் சங்க அங்கத்தவர்கள், சனசமூக நிலையங்களின் அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் மாநகர சபையின் செயற்திட்டங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட பிரதிநிதிகளின் ஆலோசனைகள் முன்மொழியப்பட்டன மற்றும்  அவர்களது கேள்விகளுக்கான விடைகளும் வழங்கப்பட்டது. 







No comments: