பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகர மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (21) முற்பகல் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
லண்டனுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அவர்களை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்திற்கு பிரித்தானியாவின் முதலீட்டாளர்களை அழைத்து வருவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கு பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயம் உதவ வேண்டுமென்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
No comments: