News Just In

10/21/2019 10:40:00 PM

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பாடங்களுக்கான செயல்முறைக் கருத்தரங்கு

கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தின் (CTCT) நிதி அனுசரணையில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS) வழிகாட்டலில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பாடங்களுக்கான இலவச செயல்முறைக் கருத்தரங்கு இன்று (21) அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்றது. 

உயர்தரத்தில் தொழில்நுட்ப பாடங்களை பயிலும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தினால் தொழில்நுட்ப பாடங்களுக்கான இலவச செயல்முறைக் கருத்தரங்குகள் சிறந்த வளவாளர்களைக் கொண்டு பல கல்வி வலயங்களில் வார இறுதி நாட்களில் நடாத்தப்பட்டுவருகின்றன.

இவ்வாண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாட ரீதியான கருத்தரங்கினை ஏற்கனவே நடத்தியிருந்த நிலையில் இன்று மாணவர்களுக்கான செயன்முறை கருத்தரங்கு நடைபெற்றது.

ஆசிரியர் விஜயராஜா அவர்களின் வழிபடுத்தலில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: