News Just In

10/22/2019 10:25:00 AM

கலா ஓயா பெருக்கெடுப்பு - பெரும் எண்ணிக்கையான மக்கள் பாதிப்பு

கலா ஓயா பெருக்கெடுத்திருப்பதால் பெரும் எண்ணிக்கையான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே.அலகக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்த நீர்த்தேக்கம் பெருக்கெடுத்தமையால் பழைய எலுவாங்குளத்தினூடாக செல்லும் புத்தளம் மன்னார் வீதி போக்குவரத்துக்கு முற்றாகத் தடைப்பட்டுள்ளது கடும் மழை பெய்து வரும் நிலையில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் எட்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனமடுவ, கொட்டுக்கச்சிய, கச்சிமடுவ நீர்த்தேக்கம் நேற்றுப் பெருக்கெடுத்ததாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

புத்தளம் பிரதேச மக்கள் சீரற்ற காலநிலையின் காரணமாக கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் முப்படையினரின் ஆதரவை பெற்றுள்ளது.

No comments: