News Just In

10/28/2019 07:23:00 AM

க.பொ.த சாதாரணதர செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செயல்முறை பரீட்சைகள் நவம்பர் மாதம் 08ஆம்  திகதி வரை நடைபெறும். செயல்முறை பரீட்சைக்காக ஒரு இலட்சத்து 74 ஆயிரம் விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

No comments: