News Just In

10/28/2019 10:42:00 AM

கல்முனைப் பகுதியில் கைக்குண்டு மீட்பு !

நற்பிட்டிமுனை, கிட்டங்கி, சேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு ஆகிய பகுதிகளை இணைக்கும் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதியின் சந்திக்கு அருகில் இன்று (28) கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைக்குண்டு மீட்கப்படுவதற்காக பிரதான வீதி மற்றும் உள் வீதிகளில் பொலிஸாரினால் போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் படையினர், இராணுவத்தினர் சம்பவ இடத்தில் வருகை தந்து கைக்குண்டை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். 

இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: