கல்முனை மாளிகைக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையமொன்றில் வலம்புரிச் சங்கு உட்பட மேலும் 5 விலையுயர்ந்த சங்குகள் கொண்ட பொதியொன்றுடன் நேற்று வியாழக்கிழமை (10.10.2019) மாலை இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான 52 வயதான ஆதம்பாவா, 43 வயதான கந்தவனம் ஜீவரத்னம் ஆகியோரிடம் இருந்து விலையுயர்ந்த சங்குகள் அடங்கலாக போலி நாணயத்தாள்களை கண்டறியும் கருவியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: