News Just In

10/27/2019 05:45:00 PM

ஆழ்துளைக் கிணற்றில் அகப்பட்ட பாலகன் சுர்ஜித் மீண்டுவர யாழ் கோப்பாய் மக்கள் பிரார்த்தனை

ஆழ்துளைக் கிணற்றில் அகப்பட்ட பாலகன் சுஜித் வில்சன் பத்திரமாக மீண்டுவரவேண்டுமென யாழ்ப்பாணம் கோப்பாய் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) காலையில் கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற பிராத்தனை நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், சனசமூக நிலையத் தலைவர்கள், ஸ்டார் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தமிழகம் திருச்சி மாவட்டம் மணற்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டிக் கிராமத்தில் வீட்டுடன் இணைந்த வயலில் கைவிடப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றுள் தவறி வீழ்ந்த 2 வயதுப் பாலகன் சுஜித் வில்சன் நலமுடன் மீட்கப்படவேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து இந்தப் பிராத்தனை நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: