News Just In

10/27/2019 06:28:00 PM

தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்காளர் அட்டை விநியோகம்

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கையை திங்கட்கிழமை (28) பூர்த்தி செய்ய முடியும் என்று தபால் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

இன்னும் 12 ஆயிரம் தபால்மூல வாக்காளர் அட்டைகள் மாத்திரமே விநியோகிக்கப்பட இருப்பதாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதித் தபால்மா அதிபர் ராஜித ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். 

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பானது ஒக்டோபர் 31 மற்றும் நவம்பர் 01 ஆகிய திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: