வடமேற்கு சிரியாவில் சனிக்கிழமை (26) அன்று மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் ISIS தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் ISIS தலைவர் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் ISIS தலைவர் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் டிரம்ப் வெளியிட்ட செய்தியில் "அமெரிக்கா பல ஆண்டுகளாக பாக்தாதியைத் தேடி மேற்கொண்ட அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்தார்.
சுரங்கமொன்றுக்கு தனது 3 இளம் குழந்தைகளையும் இழுத்துச் சென்ற ISIS தலைவரை எங்கள் நாய்கள் துரத்தியதால் சுரங்கப்பாதையின் எல்லையை அடைந்தார். இதன் பின்னர் தனது தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்ததில் தனது 3 இளம் குழந்தைகளுடன் மரணமடைந்தார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
சுரங்கப்பாதையில் நுழைந்ததில் ஒரு நாய் காயமடைந்த போதிலும், இந்த நடவடிக்கையில் அமெரிக்க இராணுவத்தினர் யாரும் கொல்லப்படவில்லை என்று டிரம்ப் மேலும் தெளிவுபடுத்தினார்.
இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அடுத்த 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
No comments: