News Just In

10/27/2019 04:34:00 PM

தீபாவளியை முன்னிட்டு "வேட்டையன்" திரைப்படக் குழுவினரால் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

(சதீஸ்)
தீபாவளித் திருநாளை முன்னிட்டு "வேட்டையன்" திரைப்படக் குழுவினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை (27)  மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.

பியூச்சர் மைன்ட் (Future Mind) அமைப்பின் உதவியுடன் "வேட்டையன்" திரைப்படக் குழுவினரால் மட்டக்களப்பிலுள்ள  விஜயா திரையரங்கின் முன்னால் வைத்து திரையரங்கிற்கு வருகைதந்த மக்களுக்கு இதன்போது சுமார் 300 பழமரக் கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.

தற்காலத்தில் சில தீய சக்திகளால் இயற்கை வனங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் சூழலில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் எம்மால் முடிந்தளவு மரங்களை வளர்க்கவேண்டும் என்பதற்கமைவாக இன்றைய தீபாவளி நன்நாளில் இங்கு வருகைதந்த மக்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு மரம் வழங்கிவைக்கப்பட்டது என "வேட்டையன்" திரைப்படக் குழுவினர் இதன்போது தெரிவித்தனர்.

No comments: