News Just In

10/28/2019 05:17:00 PM

பாவற்கொடிச்சேனையில் மூவின மாணவர்களும் கலந்துகொண்ட தீபாவளி கொண்டாட்டம்

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ஏற்பாட்டில் சமய மற்றும் கலாசார விழாக்களை ஒன்றிணைத்துக் கொண்டாடும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமானது மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (28) காலை சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு-தாழங்குடா தேசிய கல்வியியற் கல்லூரியின் முதல்வர் கே.புண்ணியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். 

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை மற்றும் ஏறாவூர் அல் அக்ஸா பெண்கள் பாடசாலை, அம்பாறை மாவட்ட மகாஓயா கல்வி வலயத்தின் சேரன்கடவெல வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும், கௌரவ அதிதிகளாக சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர். 

அழைப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ், மண்முனை மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு.முருகேசபிள்ளை, பாவற்கொடிச்சேனை கிராம சேவகர் இ.தட்சணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் மத்தியில் இன ஒற்றுமையினை ஏற்படுத்தும் முகமாக இடம்பெற்ற இந் நிகழ்வில் நடனம் அடங்கலான மேடை நிகழ்வுகளும், போத்தலில் நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், செங்கல்லில் நடத்தல் ஆகிய மைதான நிகழ்வுகளும் இடம்பெற்றன. மூவின மாணவர்களும் கூட்டாக கலந்துகொண்ட இவ் விளையாட்டு நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

 

No comments: