News Just In

10/19/2019 07:45:00 AM

அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி

அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20  கிரிக்கட் போட்டி ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கட் அணி வெள்ளிக்கிழமை (18) அவுஸ்திரேலியா பயணமானது. இலங்கை அணியானது அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்கவிருக்கின்றது.

லசித் மாலிங்க தலைமையிலான 16 வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெற்றிருக்கின்றார்கள். பாகிஸ்தான் சுற்றுத்தொடரின்போது சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: