மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டிக்கு சிவாநந்தா தேசிய பாடசாலையின் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களை தயார்படுத்தும் முகமாக விளையாட்டுக்கான சீருடை மற்றும் பாதணிகள் மாணவர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வானது சிவாநந்தா தேசிய பாடசாலையினுடைய உப அதிபர் மணிவண்ணன் தலைமையில் சிவாநந்தா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்றது.
பயிற்றுவிப்பாளர் தி.ரிசாந் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிவாநந்தா விளையாட்டு கழக உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாதணிகள் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள், சிவாநந்தா விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் கிரிக்கட் வீரர்களின் பெற்றோர்களுடனான சந்திப்பும் இதன்போது இடம்பெற்றது
No comments: